/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை அமெரிக்க மையத்தில் மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி
/
சென்னை அமெரிக்க மையத்தில் மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி
சென்னை அமெரிக்க மையத்தில் மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி
சென்னை அமெரிக்க மையத்தில் மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி
ADDED : ஏப் 24, 2025 12:15 AM

சென்னை, சென்னை, அமெரிக்க துணைத் துாதரகத்தில் உள்ள அமெரிக்க மையத்தில், 'ஸ்டெம்' எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடங்களை மையமாகக்கொண்டு, இலவச கோடைகால பயிற்சிகளை வழங்குகிறது.
இதில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த பயிற்சி, கடந்த 21ம் தேதி துவங்கி உள்ளது.
மே மாதம் வரை, வார நாட்களில் மட்டும் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் திரைப்பட திரையிடல்களும் இருக்கும்.
இதில், மைக்ரோபிட்ஸ், ஸ்னாப் சர்க்யூட்ஸ், மெர்ஜ் கியூப் ஆக்மென்ட் ரியாலிட்டி, மெய்நிகர் ரியாலிட்டி, கண்ணாடிகள், '3டி' பிரின்டர், நாசா பற்றிய செயல்பாடுகள் உள்ளிட்டவை பற்றி விளக்கப்படும்.
ரோபோட்டிக்ஸ் உள்ளிட்டவற்றில், மாணவர்களே நேரடியாக செய்து பார்க்கும் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், அறிவியல் சார்ந்த வேடிக்கை நிகழ்ச்சிகள், வினாடி வினாக்களும் நடக்கும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் 'ChennaiAMCenter@State.Gov' என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 73056 76662 என்ற வாட்சாப் எண்ணிலோ முன்பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து, சென்னை அமெரிக்க துணைத் தூதரக பொது ராஜதந்திர அதிகாரி எரிக் அட்கின்ஸ் கூறுகையில், ''இந்த கோடைகால அமர்வுகள், மாணவர்களின் கற்பனை, கண்டுபிடிப்பு மற்றும் அர்த்தமுள்ள கற்றலுக்கான நுழைவாயிலாக இருக்கும். அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை வளர்க்க உதவும் இந்த இலவச திட்டத்தை வழங்குவதில் நாங்கள் பெருமையடைகிறோம்,'' என்றார்.

