/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மன அழுத்தத்தில் இருப்போரை மீட்கும் 'ஸ்கார்ப்' அறக்கட்டளை
/
மன அழுத்தத்தில் இருப்போரை மீட்கும் 'ஸ்கார்ப்' அறக்கட்டளை
மன அழுத்தத்தில் இருப்போரை மீட்கும் 'ஸ்கார்ப்' அறக்கட்டளை
மன அழுத்தத்தில் இருப்போரை மீட்கும் 'ஸ்கார்ப்' அறக்கட்டளை
ADDED : பிப் 18, 2024 12:17 AM

ஆழ்வார்பேட்டை, மன அழுத்தம், அது சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக செயல்படுகிறது 'ஸ்கார்ப்' ஆராய்ச்சி அறக்கட்டளை. இதன் 40வது ஆண்டு விழா, ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமி அரங்கத்தில், நேற்று நடந்தது.
ஸ்கார்ப் தலைவர் சேஷைய்யா மற்றும் துணை தலைவர் மருத்துவர் தாரா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க ஹார்வர்டு மெடிக்கல் பள்ளி முன்னாள் பேராசிரியரும், மருத்துவருமான விக்ரம் படேல், உலக சுகாதார அமைப்பு முன்ளாள் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பங்கேற்றனர்.
அவர்கள், நீரிழிவு சிறப்பு மருத்துவர் மோகன், தற்கொலைகளை தடுக்கும் சினேகா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் ஆகியோரை கவுரவித்து, நினைவு பரிசுகள் வழங்கினர்.
பின், மருத்துவர் மோகன் பேசியதாவது:
மன அழுத்தம் உள்ளோருக்கு நீரிழிவு பிரச்னை வருகிறது. அதையும் கவனிக்காவிட்டால், கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. பின், உயிர் வாழ்வதற்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிஉள்ளது.
சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மன அழுத்தம் அடைகின்றனர். வீட்டில் பிள்ளைகளுக்கு பொதுத்தேர்வு வந்தால், பெற்றோருக்கு மன அழுத்தம் வந்து விடுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை ஸ்கார்ப் ஆராய்ந்து, அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.