ADDED : நவ 04, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை:நீலாங்கரை, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் திருச்செல்வம், 21. தனியார் கல்லுாரியில் பி.இ., மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.
நேற்று முன்தினம், நண்பர்களுடன் பாரதியார் தெருவில் நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த ஐந்து பேர், போதையில் திருச்செல்வத்திடம் வம்பு இழுத்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும், ஏற்கனவே முன் விரோதமும் இருந்துள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருதரப்பும், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
ஒரு கட்டத்தில், அரிவாளால் திருச்செல்வம் தலையில் சரமாரியாக வெட்டினர். பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நீலாங்கரை போலீசார், போதையில் அடிதடியில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 21, ஈஸ்வரன், 24, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரை தேடுகின்றனர்.