ADDED : செப் 24, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்,
திரு.வி.க., நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்துார், தில்லை நகர் 200 அடி சாலையில், 4,500 சதுர அடி தனியார் வணிக வளாகம் இயங்கி வருகிறது.
இந்த வணிக வளாகத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி பாக்கி மட்டும் 90,000 ரூபாயை எட்டியுள்ளது.
அதை கட்ட வலியுறுத்தி, உரிமையாளர்களுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில், பலமுறை 'நோட்டீஸ்' வழங்கியும் வரி செலுத்தப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று சிறப்பு தாசில்தார் பவானி தலைமையிலான அதிகாரிகள், வணிக வளாகத்தை போலீஸ் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைத்தனர்.