/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில் உரிமம் பெறாத கடைக்கு 'சீல்' வைப்பு
/
தொழில் உரிமம் பெறாத கடைக்கு 'சீல்' வைப்பு
ADDED : மார் 21, 2025 12:08 AM

வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு, காரம்பாக்கம் சிவபூதம் பிரதான சாலையில், மூர்த்தி என்பவரின் ஸ்ரீ வேலு ஆட்டோ மொபைல்ஸ் கடை இயங்கி வந்தது.
இங்கு, வாகனங்களுக்கு வெல்டிங் மற்றும் பெயின்டிங் செய்யப்பட்டது வந்தது. இங்கு மேற்கொள்ளப்படும் பணியால் அதிக ஒலி எழுந்தது. தவிர, சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து தொடர் புகார் எழுப்பப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது, மாநராட்சியிடம் தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் பெறாமல், இக்கடை செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கினர்.
இந்நிலையில், வளசரவாக்கம் மண்டல வருவாய் துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் இணைந்து, அக்கடைக்கு நேற்று 'சீல்' வைத்தனர்.