ADDED : நவ 12, 2024 12:30 AM
சேலையூர், சேலையூர், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் நடராஜ், 55. இவர், ராஜகீழ்ப்பாக்கம் - மாடம்பாக்கம் சாலையில், 420 வீடுகள் கொண்ட ஜெயின் அடுக்குமாடி குடியிருப்பில், தீபாவளி முதல் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை முதல், கட்டடத்தில் உள்ள 'லிப்ட்' சென்சார் கோளாறால் பழுதாகி உள்ளது. இதை அறியாத காவலாளி நடராஜ், இரவில் 'லிப்ட்'டில் 4வது மாடிக்கு சென்று, மின் விளக்குகளை அணைத்து உள்ளார். மீண்டும், அதே லிப்ட் கதவை திறந்த அவர், லிப்ட் கீழே சென்றது அறியாமல் கால் இடறி லிப்ட் மீது விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேலையூர் போலீசார், மேடவாக்கம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
