/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாறுமாறு ஓட்டுனரின் ஆட்டோ பறிமுதல்
/
தாறுமாறு ஓட்டுனரின் ஆட்டோ பறிமுதல்
ADDED : பிப் 03, 2024 12:23 AM

சென்னை, அண்ணா மேம்பாலத்தில் அதிவேகமாகவும், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாகவும், ஒருவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். பாதிக்கப்பட்டவர் வீடியோ எடுத்து, சென்னை போக்குவரத்து காவல் துறையின், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
இது குறித்து, தேனாம்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். இதில், தேனாம்பேட்டை, எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. போலீசார் தேடுவதை அறிந்த அவர், மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவானார். இந்நிலையில், அவரது ஆட்டோவை நேற்று முன்தினம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
'நரேஷ்குமார் பிடிபட்டவுடன், அவரது உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்வோம்' என, போலீசார் தெரிவித்தனர்.

