/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10 லட்சம் 'ஹவாலா' மண்ணடியில் பறிமுதல்
/
ரூ.10 லட்சம் 'ஹவாலா' மண்ணடியில் பறிமுதல்
ADDED : நவ 10, 2024 09:07 PM
மண்ணடி:சென்னை, மண்ணடியில், வடக்கு கடற்கரை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாரிமுனை, செகண்ட் லைன் பீச் சாலை வழியாக, 'பைக்'கில் சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
விசாரணையில் மண்ணடி, முத்துமாரி செட்டி தெருவைச் சேர்ந்த முகமது ராஜா, 26, என்பதும், மண்ணடியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பணிபுரிவதும் தெரிந்தது.
மேலும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவரிடமிருந்த 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது ஹவாலா பணமா என விசாரிக்கின்றனர்.