/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் மீது பைக் மோதி விபத்து சேலையூர் எஸ்.எஸ்.ஐ., பலி
/
பஸ் மீது பைக் மோதி விபத்து சேலையூர் எஸ்.எஸ்.ஐ., பலி
பஸ் மீது பைக் மோதி விபத்து சேலையூர் எஸ்.எஸ்.ஐ., பலி
பஸ் மீது பைக் மோதி விபத்து சேலையூர் எஸ்.எஸ்.ஐ., பலி
ADDED : ஏப் 03, 2025 11:51 PM

ஆலந்துார், சேலையூர், போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சப் - இன்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சிவகுமார், 55. இவர், புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில், குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, சேலையூர், கேம்ப் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். நள்ளிரவு பணி முடித்து, வீட்டிற்கு பல்சர் பைக்கில் வீட்டிற்கு ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்றுகொண்டிருந்தார்.
பரங்கிமலை, ஆசர்கானா பேருந்து நிறுத்தம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக், சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவகுமாரை, அருகில் இருந்தோர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார், அவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்திற்கு காரணமான நாமக்கல்லை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் விஜயகுமார், 45, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

