/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கு அடையாறில் தேர்வு முகாம்
/
ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கு அடையாறில் தேர்வு முகாம்
ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கு அடையாறில் தேர்வு முகாம்
ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கு அடையாறில் தேர்வு முகாம்
ADDED : ஜூலை 11, 2025 12:28 AM
சென்னை,மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க, ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கான தேர்வு முகாம், நாளை அடையாறில் நடக்கிறது.
மாநில அளவிலான ஜூனியருக்கான ஹாக்கி போட்டி, இம்மாதம் 19ல் துவங்கி, 23ம் தேதி வரை, துாத்துக்குடி மாவட்டத்தில் நடக்க உள்ளது. இப்போட்டியில், சென்னை உட்பட மாநிலம் முழுதும் இருந்து, அணிகள் பங்கேற்க உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை அணிக்கான வீரர்கள் தேர்வு முகாம், நாளை மதியம் 2:30 மணிக்கு, அடையாறு,கோட்டூர்புரம் ஹாக்கி மைதானத்தில் நடக்கிறது.
இதில், 2006 ஜன., 1ம் தேதி, அதற்கு பின் பிறந்த ஜூனியர் வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதில் தேர்வாகும் வீரர்கள், சென்னை அணியில் பங்கேற்க தகுதி பெறுவர். விபரங்களுக்கு, 63831 46742, 98402 98199 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் செயலர் உதயகுமார் தெரிவித்தார்.