/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டாத ஆட்டோவிற்கு மீண்டும் பயிற்சி விழிபிதுங்கும் சுயஉதவி குழு பெண்கள்
/
ஓட்டாத ஆட்டோவிற்கு மீண்டும் பயிற்சி விழிபிதுங்கும் சுயஉதவி குழு பெண்கள்
ஓட்டாத ஆட்டோவிற்கு மீண்டும் பயிற்சி விழிபிதுங்கும் சுயஉதவி குழு பெண்கள்
ஓட்டாத ஆட்டோவிற்கு மீண்டும் பயிற்சி விழிபிதுங்கும் சுயஉதவி குழு பெண்கள்
ADDED : நவ 28, 2025 05:18 AM
சென்னை: ஓட்டாத ஆட்டோவிற்கு, அதிகாரிகள் மீண்டும் மீண்டும் பயிற்சி அளிப்பது, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சுய உதவிக் குழுக்களின் வாயிலாக, காலநிலை மாற்றுத்தை எதிர்கொள்ளும் வகையில், 5-0 மின் ஆட்டோக்கள், கடந்த மார்ச் மாதம் பெண்களுக்கு வழங்கப்பட்டன.
இயற்கை பொருட்களை, ஆட்டோ வழியே பிரசாரம் செய்து, பொதுமக்களிடையே விற்பனை செய்வது திட்டத்தின் நோக்கம். இதற்காக, ஒவ்வொரு ஆட்டோவிலும் ஒலிபெருக்கி, மைக் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பாதுகாப்பான முறையில் ஆட்டோவை இயக்குவது குறித்து, பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சியும், கடந்த பிப்., மார்ச் மாதங்களில் வழங்கப்பட் டன.
இருப்பினும் ஆட்டோவை 'சார்ஜ்' செய்வதில் சிக்கல், அரசு தரப்பில் 'சார்ஜிங்' நிலையம் அமைத்துத் தராதது, குறுகிய கால ஓட்டுநர் பயிற்சி உள்ளிட்ட காரணங்களால், திட்டம் துவக்கப்பட்டு எட்டு மாதங்களாகியும், பெரும்பான்மை ஆட்டோக்கள் இயக்கப்படாமல் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், கோபமடைந்த பெண்கள், ஆட்டோவை அரசிடமே திருப்பி ஒப் படைத்து வருகின்றனர்.
இந்நிலையில், குறுகிய காலப் பயிற்சியால், பெண்கள் பலரும் ஆட்டோவை இயக்க சிரமப்படுவதால், அதிகாரிகள் மீண்டும் 45 நாள் ஓட்டுநர் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
ஓட்டாத ஆட்டோவிற்கு, எத ற்காக அதிகாரிகள் மீண்டும் மீண்டும் பயிற்சி அளிக்கின்றனர் என, சுய உதவிக் குழுவினர் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
பெண் பயனாளிகள் சிலர் கூறியதாவது:
கடந்த பிப்ரவரியில் ஓட்டுநர் பயிற்சியின் போது, வேறு வாகனத்தை வைத்தே அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். அந்த வாகனத்தை காட்டிலும், மின் ஆட்டோக்கள் எடை கூடுதலாக உள்ளதால், பலரும் ஆட்டோவை இயக்க சிரமப்படுகின்றனர்.
ஆட்டோ க்களை சார்ஜ் செய்யவே நாங்கள் வழியி ன்றி திண்டாடும் நிலையில், அதிகாரிகள் மீண்டும் மீண்டும் ஓட்டுநர் பயிற்சி அளிப்பது தேவையற்ற செயலாகும். எனவே, முதலில் சார்ஜிங் பிரச்னையை அரசு சரி செய்யட்டும், பின்னர் பயிற் சி அளிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

