தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ களைகட்டிய ரோஜா பூ விற்பனை

 களைகட்டிய ரோஜா பூ விற்பனை

 களைகட்டிய ரோஜா பூ விற்பனை


ADDED : பிப் 14, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயம்பேடு: காதலர் தினத்தையொட்டி கோயம்பேடு பூ சந்தையில், ரோஜா பூக்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

கோயம்பேடு சந்தைக்கு ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரோஜா பூக்கள் வரத்து உள்ளது. தினமும், 6 டன் ரோஜா பூக்கள் வரும் இடத்தில், காதலர் தினத்தையடுத்து, 12 டன் ரோஜா பூக்கள் வந்தன. விற்பனையும் ஜோராக நடந்தது.

இதில், பஞ்ச் ரோஸ் எனப்படும், 20 மொட்டு ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டு, 450 - 500 ரூபாய்க்கும்; 20 மலர்ந்த ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டு, 150 -200 ரூபாய்க்கும் விற்பனையானது.

மேலும், பன்னீர் ரோஜா கிலோ 120; சாக்லேட் ரோஜா - 100 - 120; மல்லி -1,500 - 1,800; கனகாம்பரம் 400 -- 500, ஜாதி - 1,500, சாமந்தி - 140 - 160 ரூபாயக்கும் விற்பனையானது.

சனி பிரதோசம், சிவராத்திரி அடுத்தடுத்து வருவதால், மலர் சந்தையில் வியாபாரம் கன ஜோராக நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us