/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூத்தோர் தடகளம் சென்னையில் துவக்கம்
/
மூத்தோர் தடகளம் சென்னையில் துவக்கம்
ADDED : டிச 09, 2024 02:57 AM

சென்னை:சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டிகள், பெரியமேடு நேரு மைதானத்தில் நேற்று துவங்கின. போட்டிகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி துவக்கி வைத்தார்.
ஆண்களில் 60 வயதினருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில், செண்பகமூர்த்தி 13.2 நொடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
தவிர, சுவீடனில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மூத்தோர் தடகள போட்டியில், வெற்றி பெற்ற ஜான்சன், சாந்தி, சின்னசாமி ஆகியோருக்கு தலா 20,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், சூரி உள்ளிட்டோர் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர். போட்டிகள் இன்றும், பல பிரிவுகளில் நடக்கின்றன.