/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூத்த குடிமக்களுக்கு இலவச டோக்கன் எம்.டி.சி.,யில் இன்று முதல் பெறலாம்

ADDED : ஜூன் 21, 2025 12:11 AM
சென்னை, சென்னை மாநகர பஸ்களில் பயணிக்க, மூத்த குடிமக்கள் பயணிப்பதற்கான இலவச டோக்கன்களை இன்று முதல் வழங்கப்படும் என, மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாநகர போக்குவரத்து கழகத்தில், சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு, அடுத்த மாதம் முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக்கூடிய இலவச டோக்கன்கள் இன்று முதல் ஜூலை 31 வரை வழங்கப்பட உள்ளது.
மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம், ஆறு மாதங்களுக்கான, 60 டோக்கன்கள் வழங்கப்படும். அத்துடன், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளுக்கு வழங்குதல் பணிகளும் வழங்கப்படும்.
அதன்படி, 40 பணிமனைகள், பஸ் நிலையங்களில், காலை 8:00 முதல் இரவு 7:30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, இரு கலர் புகைப்படங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.