/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் பிரச்னையை சமாளிக்க நங்கநல்லுாருக்கு தனி 'பவர்'
/
மின் பிரச்னையை சமாளிக்க நங்கநல்லுாருக்கு தனி 'பவர்'
மின் பிரச்னையை சமாளிக்க நங்கநல்லுாருக்கு தனி 'பவர்'
மின் பிரச்னையை சமாளிக்க நங்கநல்லுாருக்கு தனி 'பவர்'
ADDED : செப் 22, 2024 08:37 PM
சென்னை:நங்கநல்லுாரில், மின் வாரியத்திற்கு, 33/ 11 கிலோ வோல்ட் திறனில், துணை மின் நிலையம் உள்ளது. அங்கு, 16 எம்.வி.ஏ., எனப்படும், 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறனில் மூன்று பவர் மின்மாற்றிகள் உள்ளன.
இந்த துணைமின் நிலையத்திற்கு, வேளச்சேரி மற்றும் பல்லாவரம், 110 கி.வோ., துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வருகிறது.
நங்கநல்லுாரில் இருந்து, ஹிந்து காலனி, நேரு காலனி, உள்ளகரம், கல்லுாரி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, நங்கல்லுார் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதற்கு ஏற்ப சீராக மின் வினியோகம் செய்ய, நங்கநல்லுாருக்கு கூடுதலாக, 16 எம்.வி.ஏ., திறன் மின்மாற்றி நிறுவப்பட்டு உள்ளது. இதன் சோதனைகள் முடிவடைந்துள்ளன.
இதிலிருந்து மெக்மில்லன் நகர், பக்தவத்சலம் நகர், வாணுவம்பேட்டை அண்ணா நகர், மூவரசன்பேட்டை ராகவா நகர் ஆகிய இடங்களுக்கு, கூடுதலாக ஒரு வழித்தடத்தில் மின் வினியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு, 16 எம்.வி.ஏ., மின்மாற்றி வாயிலாக, 12 மெகா வாட் மின்சாரத்தை கையாள முடியும்.