/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரும்பாக்கத்தில் வக்கீலை மிரட்டிய ஏழு பேர் கைது
/
அரும்பாக்கத்தில் வக்கீலை மிரட்டிய ஏழு பேர் கைது
ADDED : ஏப் 19, 2025 11:55 PM
அரும்பாக்கம், அரும்பாக்கம், புகழேந்தி நகரைச் சேர்ந்தவர் இளையராஜா, 41; வழக்கறிஞர். இவரது வீட்டிற்கு, நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, ஏழு பேர் கொண்ட கும்பல் வந்தது.
பின், அவரை வெளியில் அழைத்து சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்க முயன்றனர். அப்போது, அப்பகுதியில் இருந்த சிலர் தடுக்க வந்ததால், அக்கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுகுறித்து, இளையராஜா அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, அரும்பாக்கம், என்.எஸ்.கே., நகரை சேர்ந்த ராகுல், 22, வினித்குமார், 20, டில்லி பாபு, 22, அஜித்குமார், 24, சந்துரு, 19, சரவணன், 19, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய ஏழு பேரை, நேற்று கைது செய்தனர்.
வழக்கறிஞரை மிரட்டியதற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

