/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கி கடனை செலுத்தாத ஏழு கடைகளுக்கு 'சீல்'
/
வங்கி கடனை செலுத்தாத ஏழு கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஜூலை 06, 2025 12:18 AM
மடிப்பாக்கம், நன்மங்கலத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர், மடிப்பாக்கம் - வேளச்சேரி சாலை கைவேலி பகுதியில், ஏழு கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த 2018ல், கனரா வங்கியில், 3 கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். அதனால், வங்கி மேலாளர், செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பல ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கின் தீர்ப்பில், வங்கியில் பெற்ற கடனுக்காக, பத்மாவதியின் சொத்துகளை கையகப்படுத்தும் வகையில், கடன்பெற்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த ஏழு கடைகளுக்கு 'சீல்' வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று மடிப்பாக்கம் போலீசாரின் பாதுகாப்புடன், கடை நடத்துவோரின் எதிர்ப்பையும் மீறி, நீதிமன்ற உத்தரவுப்படி, ஏழு கடைகளும் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன.