/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காப்பகத்தில் ஏழு பெண்கள் ' எஸ்கேப் '
/
காப்பகத்தில் ஏழு பெண்கள் ' எஸ்கேப் '
ADDED : ஆக 25, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில், பாலியல் வழக்கில் போலீசாரால் மீட்கப்படும் பெண்களை, மயிலாப்பூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் சேர்ப்பது வழக்கம். இவர்களின் பாதுகாப்பு பணிக்கு, சுழற்சி முறையில் பெண் வார்டன்கள் உள்ளனர்.
இந்நிலையில், காப்பகத்திலிருந்த பீஹார், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பெண்கள், ஜன்னல் கம்பியை அறுத்து, அதை வளைத்து தப்பிச் சென்றுள்ளனர்.
வார்டன் புகாரையடுத்து, மயிலாப்பூர் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஏழு பெண்களும் தப்பியோடும் காட்சி பதிவாகி இருந்தது. தப்பிச் சென்றவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.