/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலி மைதானத்தில் தேங்கும் கழிவுநீர் 2 ஆண்டாக தீராத சுகாதார சீர்கேடு
/
காலி மைதானத்தில் தேங்கும் கழிவுநீர் 2 ஆண்டாக தீராத சுகாதார சீர்கேடு
காலி மைதானத்தில் தேங்கும் கழிவுநீர் 2 ஆண்டாக தீராத சுகாதார சீர்கேடு
காலி மைதானத்தில் தேங்கும் கழிவுநீர் 2 ஆண்டாக தீராத சுகாதார சீர்கேடு
ADDED : மார் 20, 2025 12:21 AM

போரூர், வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு போரூர் சுங்கச்சாவடி அருகே, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.
இந்நிலையம் அருகே உள்ள காலி நிலத்தில், மழைநீர், அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இரண்டு ஆண்டுகளாக அந்நீரை அகற்றாததால், கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, காலி நிலத்தில் கழிவுநீர் தேங்குவதை உடனடியாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, காலி நிலத்தில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாநகராட்சிக்கு புகார் அளித்தோம்.
அப்போது, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் விடப்படுவதாக தெரிவித்தனர்.
ஆனால், தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அது கழிவுநீராக தான் இருக்க வாய்ப்புள்ளது.
ஒரு மருத்துவமனையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை முறையாக அகற்றாமல் காலி இடத்தில் விடுவது சட்டவிரோதமானது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.