/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் நிலையம் எதிரே சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
/
மெட்ரோ ரயில் நிலையம் எதிரே சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
மெட்ரோ ரயில் நிலையம் எதிரே சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
மெட்ரோ ரயில் நிலையம் எதிரே சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : டிச 26, 2024 12:19 AM

அசோக் நகர், அசோக் நகர் மற்றும் கே.கே., நகர் பகுதிகளை இணைப்பது அசோக் பில்லர் சாலை. மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது.
இச்சாலையில் அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம், தீயணைப்பு நிலையம், தபால் நிலையம், திரையரங்கம் ஆகியவை உள்ளன.
மெட்ரோ ரயில் நிலையம் எதிரே, சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் கசிந்து, சாலையில் வழிந்தோடி வருகிறது. 20 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் கழிவுநீர் பிரச்னையை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.
இதனால் சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் பயணியர் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், சாலை உள்வாங்கி திடீர் பள்ளம் ஏற்பட்டு, சாலை நடுவே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அசோக் நகர் பிரதான சாலை பாதாள சாக்கடை அடைப்பை சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.