/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீரில் கலந்த கழிவுநீர் கோடம்பாக்கத்தில் அவதி
/
குடிநீரில் கலந்த கழிவுநீர் கோடம்பாக்கத்தில் அவதி
ADDED : ஜன 25, 2024 12:27 AM

கோடம்பாக்கம், மின்வாரியம் தோண்டிய பள்ளத்தால், குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கோடம்பாக்கம், சக்கரபாணி தெரு விரிவாக்கப் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, கடந்த பொங்கலுக்கு முன்பு இருந்தே, குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது.
அவதியடைந்த பொதுமக்கள், குடிநீர் வாரியத்தில் புகார் அளித்துள்ளனர்.
குடிநீர் வாரிய ஊழியர்கள் அந்த பகுதியில் பள்ளம் தோண்டி பார்த்த போது, குடிநீர் குழாயில் உள்ள இணைப்பு வால்வுகள் உடைந்திருப்பது தெரிந்தது.
இதனால், கழிவுநீரில் குடிநீர் கலந்து வருவதும் தெரிந்தது.
போகிப் பண்டிகைக்கு முன், இந்த பகுதியில் மின்வாரியம் பள்ளம் தோண்டி மின்வடம் பதிக்கும் போது, குடிநீர் குழாய் சேதமடைந்ததாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக குடிநீரில், கழிவு நீர் கலந்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் புகார் அளித்தும், இது தங்கள் தவறு இல்லை என மின் வாரியமும், குடிநீர் வாரியமும் மாறி மாறி சண்டையிட்டு வருவதால், தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.