sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பு தடுப்பு பணி செப்டம்பரில் முடியும்; தீர்ப்பாயத்தில் வாரியம் அறிக்கை

/

அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பு தடுப்பு பணி செப்டம்பரில் முடியும்; தீர்ப்பாயத்தில் வாரியம் அறிக்கை

அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பு தடுப்பு பணி செப்டம்பரில் முடியும்; தீர்ப்பாயத்தில் வாரியம் அறிக்கை

அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பு தடுப்பு பணி செப்டம்பரில் முடியும்; தீர்ப்பாயத்தில் வாரியம் அறிக்கை


UPDATED : ஆக 22, 2025 11:25 AM

ADDED : ஆக 22, 2025 12:33 AM

Google News

UPDATED : ஆக 22, 2025 11:25 AM ADDED : ஆக 22, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகள், 15 இடங்களில் முடிந்துள்ளன; மீதமுள்ள பணிகள் வரும் செப்., 30க்குள் முடிக்கப்படும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

அடையாறு ஆற்றை சீரமைக்க, பல கோடி ரூபாயை, தமிழக அரசு செலவிட்டாலும், ஆற்று நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது.

அடையாறு ஆற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, 10 மடங்கு அதிகமாக 'கோலிபார்ம்' எனும் ஆபத்தான பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக, நாளிதழ்களில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. தீர்ப்பாய உத்தரவுப்படி, சென்னை குடிநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர் தாக்கல் செய்த அறிக்கை:

அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, முழுமையாக சீரமைக்க, அடையாறு நதி மறு சீரமைப்பு திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இடைமறிப்பு குழாய்களை அமைத்து, கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் தடுத்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்புதல், பாதாள சாக்கடை அமைப்பை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

தேவையாள அளவு, திறன் மற்றும் தொழில்நுட்பம் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.

அடையாறு நதி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, சென்னை மாநகர எல்லைக்குள், 2,000 மீட்டர் முதல், 13,500 மீட்டர் வரையிலான பகுதிகளில், 19 இடங்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டது.

இந்த இடங்களில் இடைமறிப்பு குழாய்கள் அமைத்து, கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ள. மீதமுள்ள பணிகள் வரும் செப்., 30க்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முடிக்கப்பட்ட 16 பணிகள்

 * அடையாறு - கோட்டூர்புரம், கிண்டி - ஈக்காட்டுத்தாங்கல், சாமியார் தோட்டம் - ஜாபர்கான் பேட்டை, நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர்., வடிகால் ஆகிய இடங்களில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்து, திருப்பி விடப்பட்டுள்ளன.
* அடையாறு மற்றும் கோட்டூர்புரத்தில் சுத்திகரிப்பு நிலையம், நந்தனம் டர்ன்புள்ஸ் சாலை, நந்தனம் விரிவாக்கம் பகுதிகளில், வீட்டு கழிவுநீர் அடையாற்றில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.
* அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்கு பின் உள்ள மாம்பலம் கால்வாயில், தற்காலிக சுத்திகரிப்பு வசதிகள், மாம்பலம், குன்றத்துாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் சேகரிப்பு அமைப்பு, பல்வேறு பகுதியில் கழிவுநீர் குழாய்கள் விரிவாக்கம் ஆகிய, 16 பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.








      Dinamalar
      Follow us