/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் மோட்டார்கள் பழுதால் கழிவுநீர் நிலையம் முடக்கம்
/
மின் மோட்டார்கள் பழுதால் கழிவுநீர் நிலையம் முடக்கம்
மின் மோட்டார்கள் பழுதால் கழிவுநீர் நிலையம் முடக்கம்
மின் மோட்டார்கள் பழுதால் கழிவுநீர் நிலையம் முடக்கம்
ADDED : செப் 29, 2025 02:36 AM
சென்னை: நிலையத்தை பராமரித்து, பழுடைந்த மோட்டார்களை மாற்றாததால், பெரும்பாக்கம் வாரிய குடியிருப்பில் கழிவுநீர் பிரச்னை அதிகரித்து உள்ளது.
பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், எழில் நகரில் 6,000 வீடுகள் உள்ளன. இங்கு ஒரு கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் உள்ளது. இதை, குடிநீர் வாரியம் பராமரித்து இயக்குகிறது.
ஒரு மாதமாக, இந்நிலையத்தில் உள்ள இரண்டு மோட்டார்கள் பழுதடைந்துள்ளதால், கழிவுநீர் சீராக வெளியேறவில்லை. இதனால், தரைத்தள வீடுகளில் உள்ள கழிப்பறையில் கழிவுநீர் குழாய் வழியாக விரைவாக வெளியேறாமல், மெதுவாக செல்கிறது. மேலும், தெருவில் உள்ள இயந்திர நுழைவு வாயில் வழியாகவும் வெளியேறுகிறது. இதனால், துர்நாற்றம், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நிலையத்தை பராமரித்து, பழுடைந்த மோட்டார்களை மாற்ற வேண்டும். இதற்கு, நிதி ஒதுக்க கேட்டு ஐந்து மாதமாகிறது. உயர் அதிகாரிகள் மேஜையில் கோப்புகள் உள்ளன' என்றனர்.