/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் அருகே கழிவுநீர் தேங்கி அவதி
/
கோவில் அருகே கழிவுநீர் தேங்கி அவதி
ADDED : டிச 08, 2025 05:42 AM

வடபழனி: வடபழனி வேங்கீஸ்வரர் கோவில் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால், அவ்வழியே செல்ல பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
கோடம்பாக்கம் மண் டலம், 130வது வார்டில் வ டபழனி எல்லைமுத்தம்மன் கோவில் தெரு உள்ளது. இது, வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலை ஒட்டி உள்ளது.
இத்தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சில நாட்களாக கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறி, சாலையில் தேங்கி வருகி றது.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை பிடித்தபடி செல்லும் நிலை உள்ளது. மேலும், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்து, தெருவில் தேங்கிய கழிவுநீரை அகற்ற, குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

