/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலக கோப்பை கேரம் போட்டி: சென்னை வீராங்கனையர் அசத்தல்
/
உலக கோப்பை கேரம் போட்டி: சென்னை வீராங்கனையர் அசத்தல்
உலக கோப்பை கேரம் போட்டி: சென்னை வீராங்கனையர் அசத்தல்
உலக கோப்பை கேரம் போட்டி: சென்னை வீராங்கனையர் அசத்தல்
ADDED : டிச 08, 2025 05:42 AM

சென்னை: மாலத்தீவில் நடந்த உலகக் கோப்பை கேரம் போட்டியில், சென்னையின் கீர்த்தனா லோகநாதன் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தி உள்ளார்.
சர்வதேச கேரம் கூட்டமைப்பு மற்றும் மாலத்தீவு கேரம் சங்கம் இணைந்து, 7வது உலகக் கோப்பை கேரம் போட்டியை, மாலத் தீவின் மாலேவில் உள்ள பார்சிலோ நசந்துராவில் கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடத்தின.
இதில், இந்தியா, இலங்கை, பிரான்ஸ் உட்பட 17க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 150 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.
பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சென்னை, காசி மேடைச் சேர்ந்த கீர்த்தனா, 23, மற்றொரு இந்திய வீராங்கனை யான மஹாராஷ்ட்ராவின் காஜல் குமாரியை, 26, எதிர்த்து மோதினார்.
இதில் அசத்திய கீர்த்தனா வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.
மூன்றாவது இடத்தை சென்னை காசிமேடைச் சேர்ந்த காசிமா, 20, கைப்பற்றினார்.
இந்த தொடரில், கீர்த்தனா மூன்று தங்கப் பதக்கங்கள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
போட்டி முடிவில், இந்திய அணி 7 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் என, மொத்தம் 14 பதக்கங்கள் கைப்பற்றி ஒட்டுமொத்த உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இரண்டாவது இடத்தை இலங்கை அணியும், மூன்றாவது இடத்தை வங்கதேச அணியும் கைப்பற்றின.

