2 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது
2 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது
ADDED : செப் 16, 2026 07:34 PM
சென்னை: ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில், 18, 19ம் தேதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. இதனால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
மெட்ரோ ரயில் பணிக்காக, ராமகிருஷ்ண மடம் சாலையில் கழிவுநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால், தேனாம்பேட்டை மண்டலம், ஐஸ் ஹவுஸ், சின்னதம்பி தெரு, அருணாசலம் தெரு, பார்த்தசாரதி தெரு, நடுக்குப்பம், அயோத்தி குப்பம், ராம் நகர், டி.எஸ். பார்க் மற்றும் ராயபுரம் மண்டலம், பார்டர் தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள், 18, 19ம் தேதிகளில் செயல்படாது.
இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேறினால், ராயபுரம் மண்டலம் – 81449 30905 மற்றும் தேனாம்பேட்டை மண்டலம் – 81449 30909 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால், லாரிகளில் கழிவுநீர் வெளியேற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
