ADDED : அக் 20, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, வேளச்சேரி, அன்னை இந்திரா நகர், டான்சி நகர் உள்ளிட்ட பகுதியில், கழிவுநீர் பிரச்னை பல மாதங்களாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில், மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால், பகுதிமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
இயந்திர நுழைவு வாயில் வழியாக வெளியேறும் கழிவுநீர், அருகில் உள்ள மழைநீர் வடிகால்களில் செல்வதால், நீர்நிலைகளும் பாதிக்கப்பட்டன.
அங்குள்ள எல்.ஐ.சி., காலனி கழிவுநீரேற்று நிலையம் முறையாக செயல்படாததால், பிரச்னை அதிகரிப்பதாக, அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து, நம் நாளிதழில் நேற்று, செய்தி வெளியானது. இதையடுத்து, ஜெட்ராடிங் இயந்திரம் கொண்டு, தெருக்களில் உள்ள இயந்திர நுழைவு வாயில் வழியாக அடைப்புகள் அகற்றப்பட்டன. இதனால், கழிவுநீர் வெளியேறுவது நின்றதால், பகுதிமக்கள் நிம்மதி அடைந்தனர்.