/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விவாகரத்து பெற்ற மனைவியை கொன்று புதைத்த முன்னாள் கணவர் ஸ்ரீபெரும்புதுாரில் அதிர்ச்சி
/
விவாகரத்து பெற்ற மனைவியை கொன்று புதைத்த முன்னாள் கணவர் ஸ்ரீபெரும்புதுாரில் அதிர்ச்சி
விவாகரத்து பெற்ற மனைவியை கொன்று புதைத்த முன்னாள் கணவர் ஸ்ரீபெரும்புதுாரில் அதிர்ச்சி
விவாகரத்து பெற்ற மனைவியை கொன்று புதைத்த முன்னாள் கணவர் ஸ்ரீபெரும்புதுாரில் அதிர்ச்சி
ADDED : ஆக 09, 2025 12:21 AM
ஸ்ரீபெரும்புதுார் விவாகரத்து பெற்ற மனைவியை, முன்னாள் கணவர் கொன்று புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டியைச் சேர்ந்தவர் மதன், 42; டிரைவர். இவருக்கு லைலா குமாரி, 36, என்பவருடன், 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன், இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகனும் மகளும், தந்தை மதனுடன் சோகண்டியில் வசித்து வந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாலாஜாபாத்தைச் சேர்ந்த சுகன்யா, 30, என்பவரை, மதன் திருமணம் செய்தார். இந்த நிலையில், சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலத்தில் வசித்து வரும் முன்னாள் மனைவி லைலா குமாரியுடன் மதனுக்கு மீண்டும் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில், 'லைலா குமாரி தன்னை வசியம் செய்து மயக்கிவிட்டார்' என சந்தேகமடைந்த மதன், கடந்த 4ம் தேதி சோகண்டி அருகே, திருப்பந்தியூர் வனப்பகுதிக்கு லைலா குமாரியை வரவைத்து, கத்தியால் வெட்டி கொலை செய்து, அங்கேயே பள்ளம் தோண்டி உடலை புதைத்துள்ளார்.
கடந்த 6ம் தேதி மகளை காணவில்லை என, சுங்குவார்சத்திரம் போலீசில், லைலா குமாரியின் தாய் வசந்தா புகார் அளித்தார்.
உடல் தோண்டி எடுப்பு
போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் 'லைலா குமாரியை, நான் தான் கொலை செய்து புதைத்தேன்' எனக்கூறி, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மதன் சரணடைந்தார்.
போலீசார், லைலா குமாரியின் உடலை, வருவாய் துறையினர் முன்னிலையில் இன்று தோண்டி எடுத்து, அங்கேயே பிரேத பரிசோதனை நடத்த உள்ளனர்.

