/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதிசேஷ கோவில் குளத்தில் பெருக்கெடுத்த கழிவுநீரால் அதிர்ச்சி
/
ஆதிசேஷ கோவில் குளத்தில் பெருக்கெடுத்த கழிவுநீரால் அதிர்ச்சி
ஆதிசேஷ கோவில் குளத்தில் பெருக்கெடுத்த கழிவுநீரால் அதிர்ச்சி
ஆதிசேஷ கோவில் குளத்தில் பெருக்கெடுத்த கழிவுநீரால் அதிர்ச்சி
ADDED : செப் 19, 2024 12:42 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவில் வெளியே, ஆதிசேஷ தீர்த்த குளம் உள்ளது. மழைநீர் வடிகாலில் அடைப்பு போன்ற பிரச்னைகளால், குளம் நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
இது குறித்த குற்றச்சாட்டுகளை அடுத்து, கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன.
தொடர்ந்து, மிக்ஜாம் புயலில் பெருமழை பெய்து, குளத்தின் 12 படிக்கட்டு அளவிற்கு மழைநீர் தேங்கி, தெப்போற்சவம் நடந்தது. பின், மளமளவென குறைந்து, கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், நேற்று காலை ஆதிசேஷ தீர்த்த குளத்திற்கு, மழைநீர் வரும் வழியாக திடீரென கழிவு நீர் பெருக்கெடுத்து வந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த திருவொற்றியூர் மண்டல குழு தலைவரான தனியரசு, 10க்கும் மேற்பட்ட கழிவுநீரகற்று வாரிய ஊழியர்களை வரவழைத்து, குளத்திற்கு எந்த வழியாக கழிவுநீர் வருகிறது என, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், சன்னதி தெரு வழியாக வரும் மழைநீர் வடிகால் வழியாக, கழிவுநீர் குளத்திற்கு வருவது கண்டறியப்பட்டு, அதை தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குளத்திற்கு மழைநீர் வருவதற்கு ஏதுவாக, மழைநீர் வடிகால்கள் துார்வாரப்பட்டுள்ளன. இதில், முறைகேடாக கழிவுநீர் இணைப்பு ஏற்படுத்தியிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கசிந்திருந்தாலும், கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- தனியரசு,
மண்டல குழு தலைவர்,
திருவொற்றியூர்.