/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.40 லட்சம் கையாடல் கடை ஊழியர் சிக்கினார்
/
ரூ.40 லட்சம் கையாடல் கடை ஊழியர் சிக்கினார்
ADDED : ஜூலை 19, 2025 12:22 AM

சென்னை, சூப்பர் மார்க்கெட்டில் 40 லட்ச ரூபாய் கையாடல் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார். செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஜி.என்.டி., சாலையில், 'வள்ளி மயில்' சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
இங்கு 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், கே.கே.நகர் ஜீவானந்தம் சாலையைச் சேர்ந்த கணேஷ் குமார், 39, என்பவர், ஆறு ஆண்டுகளாக விற்பனையாளராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம், கடை உரிமையாளர் ரவிச்சந்திரன் ஏதேச்சையாக கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, வாடிக்கையாளர் தரும் பணத்தை, கணேஷ்குமார் அவரது பாக்கெட்டில் போடும் காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, கணக்குகளை ஆய்வு செய்தபோது கணேஷ்குமார், சிறுக சிறுக 40 லட்ச ரூபாய் வரை கையாடல் செய்தது தெரியவந்தது.
இது குறித்து ரவிச்சந்திரன், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் கணேஷ்குமார் பணத்தை கையாடல் செய்தது உறுதியானதையடுத்து, போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.