/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
150 சவரன் நகைகள் திருடிய கடை ஊழியர்கள் கைது
/
150 சவரன் நகைகள் திருடிய கடை ஊழியர்கள் கைது
ADDED : செப் 30, 2025 02:08 AM
சவுகார்பேட்டை:சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில், 150 சவரன் நகைகள் திருடிய ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 75 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சவுகார்பேட்டை, வீரப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயஷ் ஜெயின், 29. இவர், அதே பகுதியில் தங்க நகை மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இவர், கடந்த மாதம் கடையில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது, 1,200 கிராம் நகைகள் குறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், கடையில் வேலை செய்து வந்த இரு ஊழியர்கள் கூட்டு சேர்ந்து, ஓராண்டாக சிறிது சிறிதாக நகைகளை திருடி விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த குணகந்தி கிராந்தி, 26, ஆந்திராவைச் சேர்ந்த ஈகா மணிகண்டா, 23 ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த 75 கிராம் எடை கொண்ட 3 தங்கச்சங்கிலிகள், ஒரு பிரேஸ்லெட், ஒரு மோதிரம் மற்றும் ஐபோன் உட்பட மூன்று மொ பைல்போன்கள், 20,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.