/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
400 கிலோ குட்கா பதுக்கிய கடை உரிமையாளர் கைது
/
400 கிலோ குட்கா பதுக்கிய கடை உரிமையாளர் கைது
ADDED : நவ 03, 2025 01:35 AM

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் பிரதான சாலையில் உள்ள ஒரு கடையில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, பள்ளி கரணை தனிப்படை போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த கடையில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அக்கடையில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
அதன்பின், கடை உரிமையாளர் நந்தலால் குமார், 29, என்பவரை கைது செய்து, அவரது காரை சோதனை செய்தனர். காரிலும் புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
மொத்தம், 403 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், நந்தலால் குமாரை ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

