/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரு வீடுகளில் 25 சவரன் நகை திருட்டு
/
இரு வீடுகளில் 25 சவரன் நகை திருட்டு
ADDED : நவ 03, 2025 01:35 AM

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில், இரு வீடுகளில் 25 சவரன் நகைகள் திருட்டு போயின.
பள்ளிப்பட்டு அடுத்த கர்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 52; பத்திர எழுத்தர். இவர், பள்ளிப்பட்டு சார் - பதிவாளர் அலுவலகம் அருகே அலுவலகம் நடத்தி வருகிறார்.
இவரது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக, நேற்று முன்தினம் திருப்பதிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், பழனி வீட்டில் நேற்று முன்தினம் இரவு திருட்டு நடந்துள்ளது. பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகை, 900 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 85,000 ரூபாய் திருட்டு போயிருந்தது. பள்ளிப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
குரோம்பேட்டை தாம்பரம் அருகே, குரோம்பேட்டை சோழவரம் நகரைச் சேர்ந்தவர் மணவாளன், 50; தனியார் ஊழியர். இவர், வீட்டை பூட்டி, குடும்பத்துடன் மூன்று மாதங்களுக்கு முன், பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 12 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

