/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடை உரிமையாளர், பெண் ஊழியருக்கு கத்திக்குத்து
/
கடை உரிமையாளர், பெண் ஊழியருக்கு கத்திக்குத்து
ADDED : அக் 01, 2025 02:42 PM

திருமங்கலம்:
பழைய வாகனங்கள் வற்பனை கடை உரிமையாளர் மற்றும் பெண் ஊழியரை கத்தியால் குத்தியவரை, போலீசார் கைது செய்தனர்.
அண்ணா நகர், திருமூலர் காலனியைச் சேர்ந்தவர் பாரஸ், 48. இவர், அண்ணா நகரில், எஸ்.ஜெ., மோட்டார்ஸ் என்ற பெயரில், பழைய வாகனங்களை தவணை முறையில் விற்பனை செய்து வருக
இவரது கடையில், கடந்த 2024ல் அம்பத்துாரைச் சேர்ந்த மதிவாணன், 50, என்பவர் 8.50 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி, தவணை முறையில் டிராவல்ஸ் வேன் வாங்கினார். அதற்கு முறையாக தவணை செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 13ம் தேதி, டிராவல்ஸ் வேன் பிடிக்கவில்லை எனக் கூறி, வாகனத்தை திரும்ப கொடுத்த மதிவாணன், முன்பணத்தை கேட்டுள்ளார்.
அதற்கு பாரஸ், தவணையில் உள்ள பாக்கி தொகையை செலுத்தி முன்பணத்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் கடைக்கு வந்த மதிவாணன், முன்பணத்தை கேட்டு தகராறு செய்து, பாரஸ் மற்றும் கடையின் பெண் ஊழியரை கத்தியால் குத்தியுள்ளார்.
இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். திருமங்கலம் போலீசார், மதிவாணனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.