நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடையில் திருட்டு
பெரம்பூர், :பெரம்பூர் மார்க்கெட் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி, 65. இவர், வீட்டருகே 'ஜெயா கூல் பார்' என்ற பெயரில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கடையில் இருந்த போது, மர்மநபர் ஒருவர் கூல் டிரிங்ஸ் வேண்டும் எனக் கேட்டுள்ளார். ராஜலட்சுமி பிரிஜ்ஜில் உள்ள கூல் டிரிங்சை எடுத்து வருவதற்குள், கல்லா பெட்டியில் இருந்த 8,000 ரூபாயை எடுத்துக் கொண்டு, அந்த நபர் மாயமானார். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.