/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு கோயம்பேடு சந்தையில் 'சீல்'
/
உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு கோயம்பேடு சந்தையில் 'சீல்'
உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு கோயம்பேடு சந்தையில் 'சீல்'
உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு கோயம்பேடு சந்தையில் 'சீல்'
ADDED : ஜன 30, 2024 12:31 AM

கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமக் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 2021 -- 2023 ம் ஆண்டிற்கான உரிமம் பெறாத, பராமரிப்புக் கட்டணம் செலுத்தாத கடைகள் குறித்து, கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
அதில் 100 க்கும் மேற்பட்ட கடைகள் உரிமம் பெறாமலும், பராமரிப்புக் கட்டணம் செலுத்தாமலும் இருப்பது தெரியவந்தது. இந்த கடைகளுக்கு பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகும் உரிமம் பெறாத எட்டு கடைகளுக்கு, பொங்கலுக்கு முன் சீல் வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, காய்கறி சந்தையில் ஒன்பது கடைகள் மற்றும் பூ சந்தையில் ஐந்து கடைகள் என, மொத்தம் 14 கடைகளுக்கு நேற்று அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி இந்துமதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.