/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரியில் போலீசார் பற்றாக்குறை நெரிசலை கட்டுப்படுத்துவதில் திணறல்
/
வேளச்சேரியில் போலீசார் பற்றாக்குறை நெரிசலை கட்டுப்படுத்துவதில் திணறல்
வேளச்சேரியில் போலீசார் பற்றாக்குறை நெரிசலை கட்டுப்படுத்துவதில் திணறல்
வேளச்சேரியில் போலீசார் பற்றாக்குறை நெரிசலை கட்டுப்படுத்துவதில் திணறல்
ADDED : ஏப் 13, 2025 09:29 PM
வேளச்சேரி:சென்னையில் அபார வளர்ச்சி அடைந்துள்ள பகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி உள்ளது. மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனிவீடுகள் அதிகளவில் உள்ளன.
இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும், அங்கிருந்து நகருக்குள் வரவும், வேளச்சேரியை பன்படுத்துவோர் அதிகம்.
இதனால், வாகன நெரிசல் அதிகரித்ததால், சாலை விரிவாக்கம், மேம்பாலம் உள்ளிட்ட கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், போதிய எண்ணிக்கையில் போக்குவரத்து போலீசார் இல்லாததால், நெரிசலை தடுக்க முடியாமல் அவர்கள் திணறுகின்றனர்.
வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலையம், 1984ம் ஆண்டு, 27 போலீசாருடன் துவங்கப்பட்டது. அப்போதிருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப, போலீசார் நியமிக்கப்பட்டனர்.
தற்போதும், அதே எண்ணிக்கையில் போலீசார் உள்ளனர். இதனால், நெரிசலை தடுக்க முடியாமல் அவர்கள் திணறுகின்றனர்.
இது குறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
இதர பணி, விடுமுறை, ஓய்வு என, 7முதல் 10 போலீசார் சென்று விடுவர். இருக்கிற போலீசில், வி.ஐ.பி., போராட்டம், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, 5, 6 போலீசார் செல்வர். மீதமுள்ள போலீசாரை வைத்து, நெரிசலை தடுக்க வேண்டும்.
டைடல் பார்க், எஸ்.ஆர்.பி., டூல்ஸ், விஜயநகர், ஏரிக்கரை, காந்தி நகர், எம்.ஜி.ஆர்., சாலை ஆகிய சிக்னல்களில், எப்போதும் போலீசார் நிற்க வேண்டும். போதிய போலீசார் இல்லாததால், மிகவும் சிரமப்படுகிறோம்.
பல நாட்கள் ஓய்வுக்கு செல்ல முடியாமல், தொடர்ந்து பணி செய்ய வேண்டி உள்ளது. இதனால், மன உளைச்சல், உடல் பாதிப்பு ஏற்படுகிறது.
வேளச்சேரி, 1984ம் ஆண்டை போல் இல்லை. பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போதுள்ள வளர்ச்சிக்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

