/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அம்மா' மண்டபங்களை திறக்காமல் முடக்குவதா?
/
'அம்மா' மண்டபங்களை திறக்காமல் முடக்குவதா?
UPDATED : மே 06, 2025 10:41 AM
ADDED : மே 06, 2025 01:18 AM
ஆவடி மாநகராட்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் 11 கோடி ரூபாயில் அதிநவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட 'அம்மா' திருமண மண்டபம், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. மிகக் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த கட்டப்பட்ட இம்மண்டபங்களை மூடி வைத்திருக்கும் தி.மு.க., அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி, கடும் கண்டனத்திற்குரியது.
ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனையால் உருவாக்கப்பட்ட 'அம்மா' மருந்தகம், 'அம்மா' குடிநீர், 'அம்மா' சிமென்ட், 'அம்மா' உப்பு என பெரும்பாலான திட்டங்களை திட்டமிட்டு முடக்கியதைபோல் இதை முடக்க பார்க்கிறது.
- தினகரன்
அ.ம.மு.க., பொதுச்செயலர்