/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார பஸ்களை தனியார் இயக்குவதா? எம்.டி.சி., இயக்க சி.ஐ.டி.யூ., பிரசாரம்
/
மின்சார பஸ்களை தனியார் இயக்குவதா? எம்.டி.சி., இயக்க சி.ஐ.டி.யூ., பிரசாரம்
மின்சார பஸ்களை தனியார் இயக்குவதா? எம்.டி.சி., இயக்க சி.ஐ.டி.யூ., பிரசாரம்
மின்சார பஸ்களை தனியார் இயக்குவதா? எம்.டி.சி., இயக்க சி.ஐ.டி.யூ., பிரசாரம்
ADDED : மே 15, 2025 12:38 AM
சென்னை,
மின்சார பஸ்களை தனியாரிடம் ஒப்படைக்காமல், மாநகர போக்குவரத்து கழகமே இயக்க வேண்டுமென, சி.ஐ.டி.யு., பிரசாரம் செய்து வருகிறது.
சென்னையின் பயணியர் தேவையை போக்கும் வகையில், தனியார் பங்களிப்போடு சென்னையில், 1,100 மின்சார தாழ்தள பஸ்களை இயக்க, மாநகர போக்குவரத்து கழகமான, எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, 610 தனியார் மின்சார பஸ்களை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, 35 மின்சார பஸ்கள் பெரும்பாக்கம் பணிமனைக்கு வந்துள்ளன.
இரண்டு மாதங்களில் தனியார் மின்சார பஸ் சேவை துவங்க உள்ளது. இதற்கு, சி.ஐ.டி.யு., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து, சி.ஐ.டி.யு., மாநகர போக்குவரத்து கழக பொதுச்செயலர் தயானந்தன் கூறியதாவது:
சென்னையில் தனியார் மின்சார பேருந்துகள் இயக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கடந்த 11ம் தேதி முதல், 200 வார்டுகளிலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறோம்.
தனியார் பேருந்துகள் இயக்கினால், தற்போதுள்ள சலுகை பயணத் திட்டங்கள் இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
தற்போது, சாதாரண பஸ்களில் மட்டுமே பெண்களுக்கான இலவச பயண திட்டம் உள்ளது; சொகுசு, 'ஏசி' பஸ்களில் அனுமதி இல்லை.
தனியார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்து, லாப நோக்கத்தோடு செயல்படும் என்பதால், தற்போதுள்ள சலுகைகள் படிப்படியாக நீக்கும் அபாயம் உள்ளது.
எனவே, மின்சார பஸ்களை, எம்.டி.சி.,யே இயக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.