/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமணத்தை மீறிய உறவு: பெண் எஸ்.ஐ., தற்கொலை
/
திருமணத்தை மீறிய உறவு: பெண் எஸ்.ஐ., தற்கொலை
ADDED : டிச 15, 2025 04:59 AM

அம்பத்துார்: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மாதா, 31. இவர், அம்பத்துார் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தன் இரண்டு மகன்களுடன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், அந்தோணி மாதா தன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த அம்பத்துார் போலீசார், அந்தோணி மாதாவின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு அந்தோணி மாதா, எஸ்.ஐ.,க்கு பயிற்சி பெற்றபோது, ரஞ்சித் குமார், 30, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரஞ்சித் குமார், தற்போது மீஞ்சூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக உள்ளார்.
ரஞ்சித் குமாருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவருடன் அந்தோணி மாதா பழகி வந்தார். இந்நிலையில், இருவருக்கும் இடையே, சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், மன உளைச்சலில் இருந்த அந்தோணி மாதா, நேற்று முன்தினம் இரவு, ரஞ்சித் குமாருக்கு வீடியோ கால் செய்து, தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
ரஞ்சித் குமார், அம்பத்துார் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க, அம்பத்துார் போலீசார் சென்று பார்த்தபோது, அவர் இறந்தது தெரிந்தது.

