ADDED : ஆக 04, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நந்தம்பாக்கம்:ரோந்து பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதியதில், அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பரங்கிமலை போக்குவரத்து பிரிவின் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், 48. நேற்று அதிகாலை, நந்தம்பாக்கம் பகுதியில் ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, கிண்டியில் இருந்து அதிவேகமாக சென்ற கார், ரமேஷ் மீது மோதியது. இதில், அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சாலையோரம் காரை நிறுத்தி, அதன் ஓட்டுநர் தப்பி ஓடினார். ஓட்டுநர், போதையில் இருந்ததாக உதவி ஆய்வாளர் கூறினார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார், காரை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.