/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது மாணவியிடம் சில்மிஷம் வி.சி., நிர்வாகி கைது
/
பொது மாணவியிடம் சில்மிஷம் வி.சி., நிர்வாகி கைது
ADDED : மே 15, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த வி.சி., கட்சி நிர்வாகியான நன்மாறன், 63, என்பவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். அவர்கள், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் நன்மாறன் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ், வழக்கு பதிந்து அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
நன்மாறன், சென்னை துறைமுகத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச் செயலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.