/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.61 லட்சம் வெள்ளி கட்டிகள் எழும்பூரில் பறிமுதல்
/
ரூ.61 லட்சம் வெள்ளி கட்டிகள் எழும்பூரில் பறிமுதல்
ரூ.61 லட்சம் வெள்ளி கட்டிகள் எழும்பூரில் பறிமுதல்
ரூ.61 லட்சம் வெள்ளி கட்டிகள் எழும்பூரில் பறிமுதல்
ADDED : பிப் 12, 2026 06:09 AM

சென்னை: உரிய ஆவணம் இன்றி ரயிலில் எடுத்து வரப்பட்ட 61.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கட்டிகள் மற்றும் 2.50 லட்சம் ரூபாயை, ரயில்வே பாதுகாப்பு படையினர், எழும்பூரில் பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில், நேற்று முன்தினம், எழும்பூர் ரயில் நிலையத்தின் ஏழாவது நடைமேடைக்கு வந்தது.
ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணி ஒருவரின் பையை, இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான போலீசார் சோதித்தபோது, அதில் 61.50 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 20.43 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் 2.50 லட்சம் ரூபாய் ரொக்கமும் இருந்தது.
விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த சஞ்சய், 40, என்பதும், வெள்ளி கட்டிகள் மற்றும் பணத்தை, ஒடிசா மாநிலம் பாலேஸ்வரியில் இருந்து, சென்னைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.
அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், சஞ்சயை கைது செய்த போலீசார், அவரையும், பறிமுதல் செய்த வெள்ளி மற்றும் ரொக்கத்தையும், வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

