/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கப்பூர் விமானம் மீண்டும் தாமதம்
/
சிங்கப்பூர் விமானம் மீண்டும் தாமதம்
ADDED : செப் 20, 2024 12:21 AM
சென்னை,சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல 'ஏர் இந்தியா' எக்ஸ்பிரஸ் விமானம் அதிகாலை 1:40 மணிக்கு புறப்பட வேண்டும்.
விமானத்தில் பயணிக்க, நேற்று முன்தினம் இரவு 10:00 மணி முதல், 175 பயணியர் காத்திருந்தனர். வருகை தாமதமானதால் புறப்பாடு நேரமாகும் என, விமான நிறுவனம் அறிவித்தது. இந்த தகவலை, பயணியர் பலர் அறியவில்லை.
இந்நிலையில், 6 மணி நேரம் தாமதமாக, காலை 10:31 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டு சென்றது, பயணியரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதேபோல், அதிகாலை 1:40 மணி விமானம், நேற்று முன்தினமும் 9 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூருக்கு புறப்பட்டது.
ஜெட்டாவுக்கு விமானம்
சென்னையில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா இடையே வாரம் மூன்று முறை நேரடி விமான சேவையை சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனம், வரும் அக்.,2 ம் தேதி துவங்க உள்ளது.
திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சென்னை - ஜெட்டா - சென்னை இடையே நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து இரவு 7:00 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10:25 மணிக்கு ஜெட்டா சென்றடையும்.
ஜெட்டாவில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 5:10 மணிக்கு சென்னை வந்தடையும்.