/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை
ADDED : ஜூலை 16, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், இரவு 9:00 மணி வரை சோதனை நடந்தது.
குன்றத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், டி.எஸ்.பி., கலைச்செல்வம்தலைமையில், நேற்று மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள், அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். சில ஆவணங்களை எடுத்து சென்றனர். பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என, போலீசார் கூறினர். இரவு வரை சோதனை நடந்தது.