/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமாவின் மீது 'காஸ்' சிலிண்டரை போட்டு கொன்ற அக்கா, தம்பிக்கு ஆயுள் தண்டனை
/
மாமாவின் மீது 'காஸ்' சிலிண்டரை போட்டு கொன்ற அக்கா, தம்பிக்கு ஆயுள் தண்டனை
மாமாவின் மீது 'காஸ்' சிலிண்டரை போட்டு கொன்ற அக்கா, தம்பிக்கு ஆயுள் தண்டனை
மாமாவின் மீது 'காஸ்' சிலிண்டரை போட்டு கொன்ற அக்கா, தம்பிக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஏப் 10, 2025 12:20 AM
சென்னை, சென்னை, மயிலாப்பூர் 6வது தெருவைச் சேர்ந்தவர் வனிதா, 35. இவரது கணவர் கபாலி. 'வெல்டிங்' கடையில் பணிபுரிந்து வந்த கபாலி, தன் மனைவி வனிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இது குறித்து, தன் சகோதரர் சாந்தகுமாரிடம், 42, வனிதா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2021 மார்ச் 26ம் தேதி, மது அருந்தி வந்து வீட்டில் துாங்கி கொண்டிருந்த கபாலியின் மீது, வனிதாவின் தம்பி 'காஸ்' சிலிண்டரை போட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கபாலி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மயிலாப்பூர் போலீசார், சாந்தகுமார், வனிதா ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது கொலை, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 19வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்து வந்தது.
போலீஸ் தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தனசேகரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சாந்தகுமார், வனிதா ஆகியோர் மீது கொலை குற்றச்சாட்டு போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.