/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சகோதரிகள்
/
இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சகோதரிகள்
ADDED : டிச 26, 2024 12:13 AM

திருவொற்றியூர், டதிருவொற்றியூர், பலகை தொட்டிக் குப்பத்தை சேர்ந்த டி.ராஜ்குமார் - ஆர்.விஷ்ணுபிரியா தம்பதியின் மகள்கள் சன்யுத்கா, 7, 2ம் வகுப்பு; சம்யுக்தா, 4, எல்.கே.ஜி., படிக்கின்றனர்.
மூத்த மகள் சன்யுக்தா, 2 - 10 எழுத்துகள் கொண்ட, 490 ஆங்கில வார்த்தைகளுக்கு, 6 நிமிடங்கள், 51 வினாடிகளில், எழுத்துகளை உச்சரித்து, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டு' புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல், இளைய மகள் சம்யுக்தா, 1.8 வயதில், எட்டு பறவைகள், ஒன்பது மனித உடல் பாகங்கள், ஐந்து வகை விலங்குகள் சத்தம், ஒன்பது பழங்கள், நான்கு நாடுகளின் கொடிகள், ஏழு பிரபலமான தலைவர்கள், ஐந்து தேசிய திருவிழாக்கள், எட்டு தேசிய சின்னங்கள், நான்கு கடல் விலங்குகள், ஒன்பது காய்கறிகள், 20 விலங்குகள், ஏழு வாகனங்கள்.
பத்து எலக்ட்ரிக் பொருட்கள், ஏழு உலக அதிசயம், ஐந்து பூச்சிகள் உள்ளிட்டவற்றை அடையாளம் காட்டி, 2022ல், இந்தியா புக் ஆப் ரெக்கார்டு புத்தகம் மற்றும் கலாம் வேல்ட் ரெக்கார்டிலும் இடம் பிடித்துள்ளார்.
குழந்தைகள் அபார நினைவு சக்தியுடன் இருப்பதை அறிந்த தாய் விஷ்ணுபிரியா, அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

