/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் நிறுவன இடமாற்றத்தை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம்
/
தனியார் நிறுவன இடமாற்றத்தை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம்
தனியார் நிறுவன இடமாற்றத்தை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம்
தனியார் நிறுவன இடமாற்றத்தை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 09, 2025 11:58 PM

ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுார், அலமாதி சாலையில், 'செலிபிரிட்டி பேஷன் லிமிட்' என்ற பெயரில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதில், 560 பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நிர்வாக சிக்கல் காரணமாக, தாம்பரம், மெப்ஸ் பகுதிக்கு, இந்நிறுவனத்தை இடமாற்றம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, கடந்த 7ம் தேதி மாலை தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், விருப்பம் உள்ளோர், தாம்பரத்திற்கு வந்து பணியாற்றலாம் என்றும் என நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த 400க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், நேற்று காலை 11:00 மணி முதல் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிறுவனத்தின் மனிதவள நிர்வாகம் மற்றும் ஆவடி மண்டல துணை தாசில்தார் விஜயானந்த் தலைமையில் வருவாய்த் துறையினர் பேச்சு நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை சார்பில், தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் குழுவினருடன், இன்று காலை பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.