/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோடம்பாக்கத்தில் மாமூல் தராததால் கடைக்காரரை வெட்டிய ஆறு பேர் கைது
/
கோடம்பாக்கத்தில் மாமூல் தராததால் கடைக்காரரை வெட்டிய ஆறு பேர் கைது
கோடம்பாக்கத்தில் மாமூல் தராததால் கடைக்காரரை வெட்டிய ஆறு பேர் கைது
கோடம்பாக்கத்தில் மாமூல் தராததால் கடைக்காரரை வெட்டிய ஆறு பேர் கைது
ADDED : மே 25, 2025 08:19 PM
கோடம்பாக்கம்:சூளைமேடு, வன்னியர் தெருவை சேர்ந்தவர் தங்கபெருமாள், 41. இவர், சூளைமேடு நெடுஞ்சாலையில், 10 ஆண்டுகளாக காயலாங்கடை நடத்தி வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு, சூளைமேடு வன்னியர் தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்போது, இரு பைக்கில் வந்த 6 பேர், அவரை வழி மறித்து, கத்தியால் வெட்டி, அவரிடமிருந்த 30,000 ரூபாயை பறித்து தப்பினர்.
அங்கிருந்தவர்கள், தங்கபெருமாளை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரையடுத்து, கோடம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், தங்கபெருமாள் கடைக்கு அடிக்கடி வரும், அதே பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர், மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் தகராறு செய்ததால், காவல் நிலையத்தில் தங்கபெருமாள் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் ராகுல் மற்றும் நண்பர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, சிறுவர்கள் என்பது தெரிந்ததால், எழுதி வாங்கி, எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், கடந்த மாதம் தங்கபெருமாள் வெளியூர் சென்ற நிலையில், அவரது உறவினர் முருகவேல் என்பவர் கடையில் இருந்தார். அப்போது, அங்கு சென்ற ராகுல் மற்றும் நண்பர்கள் மாமூல் கேட்டு மிரட்டி சென்றனர்.
நேற்று முன்தினம் ஊரில் இருந்து வந்த தங்கபெருமாள், கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்ற போது, ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, அவரை தாக்கி பணம் பறித்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கோடம்பாக்கம் ராகுல் என்ற அமீர்பாஷா, 19, பிராங்ளின், 18, சூளைமேடு பிரியாபிரபு, 19, ராஜி, 20, வினோத்குமார், 19, முகில், 19, ஆகிய ஆறு பேரை, நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.