ADDED : செப் 05, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; சென்னையில் இருந்து நேற்று காலை 7:40 மணிக்கு அந்தமான் செல்லும் விமானம், பகல் 1:35 மணிக்கு மும்பை விமானம், மதியம் 2:25 மணிக்கு கர்நாடகா மாநிலம் ஷிவமொக்கா செல்லும் விமானம் ஆகிய மூன்று புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதே போல், சென்னைக்கு மும்பையில் இருந்து காலை 7:00 மணிக்கு வரவேண்டிய விமானம், அந்தமானில் இருந்து பகல் 12:55 மணி விமானம், ஷிவமொக்காவில் இருந்து காலை 10:10 மணிக்கு வரவேண்டிய வருகை விமானங்கள் ஆகிய விமானங் களும் ரத்து செய்யப் பட்டன.